"சித்தி'... இந்தியத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக (இந்தக் குரல் ஒலிக்கும் அதே சன் டிவியில்) மெகா மெகா ஹிட் அடித்த சீரியல் அது. 1999 டிசம்பர் 20-ஆம் தேதி 2001 நவம்பர் 1-ஆம் தேதிவரை, கிட்டத் தட்ட இரண்டு வருடங்களாக ஒளிபரப்பிய சீரியல் அது. ஆண்கள் வர்க்கமும் சீரியலுக்கு அடிமையானது "சித்தி'-யின் புண்ணியத்தால்தான்.
சினிமாக்களுக்கு வெற்றிவிழா, வெள்ளிவிழா கொண்டாடுவது போல, தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில், சென்னை லீ மெரிடியன் ஓட்டலில் "சித்தி'க்கும் வெற்றிவிழா நடந்தது.
சரி, இப்ப "சித்தி-2' "டகால்டி' மேட்டருக்கு வருவோம். மெகா நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது தினசரிகளில் வெளியாகும் விளம் பரத்தைவிட, "சித்தி-2'-க்கு பிரம்மாண்ட விளம்பரங்கள் வெளியாகி, கடந்த 27-ஆம் தேதியிலிருந்து சன் டி.வி.யில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. சுந்தர் கே. விஜயன் டைரக்ட் பண்ணி வருகிறார்.
சாரதா (ராதிகா), சண்முகம் (பொன்வண்ணன்), மல்லி ("பிக்பாஸ்-2' புகழ் மீரா வாசுதேவன், ஷில்பா, "கள்ளக் காதல்' புகழ் மகாலட்சுமி, கே. பாக்யராஜ், சமுத்திரகனி, வக்கீல் அருள், மாஜி நடிகை ரூபிணி, பேரா சிரியர் கு. ஞானசம்பந்தம் என பெரிய ஸ்டார் குரூப்பே இருக்கு. சீரியல் ஆரம்பித்த முதல்நாளே கதையை ஆரம்பித்துவிட்டார்கள்.
இரண்டாவது நாளில் அழகிய கிராமம் ஒன்றைச் சுற்றிப் பார்க்கும் மல்லியின் (அதாங்க வில்லி) மகன் ""ஏம்மா இந்தமாதிரி அழகான கிராமத்தைவிட்டு வந்தே?'' அந்த சண்முகம் பொண்டாட்டி ஓடிட்டா ளாமே?'' (அம்மாட்ட மகன் கேட்குறாராம்) எனக் கேட்கிறார். ""அவன் பொண் டாட்டிய ஓடவச்சதே நான் தான்'' (என்ன ஒரு வில்லத் தனம்!) என்கிறார் மல்லி.
மூன்றாவது நாளில், "இன்று போய் நாளை வா' படத்தில் பாக்யராஜும்ராதிகாவும் நடிக்கும் சீன் (குடுகுடுப்பைக் காரன் சொன்ன ப்ளாக் பேண்ட், ஒயிட் ஷர்ட் ) அப்படியே இருந்தது. இதிலும் பாக்யராஜும் ராதிகா வும்தான். இனிமேல் சமுத் திரகனி வரப்போகும் சீன்களை எந்தப் படத் திலிருந்து சுடப் போகிறார் களோ?).
-பரமேஷ்